Pages

Friday, December 5, 2014

How to make a Rose

Saturday, March 16, 2013

Google AdSense Account : நமக்கென்று ஒரு சொந்த கூகுல் அட்சென்ஸ் கணக்கு.










இணையத்தில்  Google AdSense  பற்றி எவ்வளவோ விடயங்கள் இருந்தாலும் அவை தெளிவாகவும் தமிழிலும் இல்லை, எனவே அதை பற்றி தெளிவாக உங்களிடம் எடுத்து சொல்லி,உங்களுக்கென்று ஒரு கூகுல் அட்சென்ஸ் கணக்கொன்றை எவ்வாறு உருவாக்கி கொள்வது எப்படி என்பதை பார்ப்போம்.



கூகுல் அட்சென்ஸ்

முதலில் நான் கூகுல் அட்சென்ஸ் பற்றி தெரிந்து கொள்ள, வெப்சைட் பலவற்றை தேடித்தேடி படித்தேன், அவற்றில் பல முறையாகவும் பல  எவ்வாறு கள்ளதனமாக கணக்கொன்றை உருவாக்குவது பற்றியும் இருந்தது. எனவே நாங்கள் உடனே முதலில் யோசிப்பது கள்ள வேலைகளைதானே அதாவது எப்படி குறுக்கு வழியில் விரைவாக  Google Ad Sense  உருவாக்குவது எவ்வாறு? (இப்பொழுது அட்சென்கள் விற்கபடுகின்றது என்று விளம்பரமும் பண்ணுறாங்க.. அது எல்லாம் நம்பிவிட வேண்டாம்)

(மன்னிக்கவும், எழுத்து நடையை மாற்றினால் இன்னும் தெளிவாகவும் படித்ததை விளங்கிகொள்லாம் என்று நினைத்தேன்.)


அதைதான் நானும் நினைத்து கள்ளதனமாக கணகொன்றை தொடங்கி சம்பாதித்த 100$ ஐயும் இல்லாமல் ஆக்கிட்டு ப்லொக்கிற்கு ட்ரபிக் கொண்டு வர செலவழிச்ச 20$ ரும் இல்லாமல் ஆக்கிட்டேன் ஆனால் ஒன்ன கத்துகிட்டேன், கள்ளதனமா அட்சென்ஸ் கணக்க உருவாக்கவும் முடியாது,கள்ள அட் க்ளிக் போடவும் முடியாது,கள்ளதனமா ட்ரஃபிக் கொண்டுவரவும் முடியாது என்று. உங்களிடம் எதிர்ப்பார்பது அதைதான்.


உதாரனமாக எட்டாத பழம் புளிக்கும் என்பது போல எனக்கும் அட்சென்சுகும் சரிவராது என்று நினைத்து அட்சென்சும் வேனாம் ஒரு மண்னும் வேனாம், அதுல மனுசன் உழைப்பானா எண்டு மனச தேத்திக்கொண்டு இருந்தேன், பிறகு பல ப்லொக்குகளில் அட்சென்சஸ் பற்றி எழுதி இருந்ததை படித்து மனதளவில் தைரியப்படுதிக்கொண்டு மறுபடியும் அட்சென்சுகுள் நுழைந்தேன்.

 

சரியா இரண்டே இரண்டு கிழமைதான் போனது எனக்கு புது அட்சென்ஸ் கணக்கு கிடைக்க, புதுசா ஒரு ப்லொக்கர் ஒன்று தொடங்கி அதுல ஒரு கிழமை வரைக்கும் இங்லிஷ் போஸ்ட்களை எழுத ஆரம்பித்தேன் பிறகு அட்சென்ஸுக்கு அனுமதி கேட்டேன் இரண்டே நாளில் கிடைத்தது,ஆனால் அட்சென்ஸ் கணக்கில் லொக் ஆனா அது சொன்னது இன்னும் Pending  Review  என்று. பிறகென்ன நான் அந்த அட்சென்ஸ் கணக்கில் Ads களை போட்டேன், Ads தெரியவில்லை. என்ன என்று பாத்தா Google ல சொல்லி இருக்காங்க  Approve பண்ணின பிறகு தான் அட்ஸ் காட்டும் என்று. அப்பிடியே ஒருகிழமை போய்விட்டது. இருந்தாலும் அந்த எனது இங்லிஷ் ப்லொகில் போஸ்ட்களை எழுதுவதை நிறுத்த வில்லை. என்ன ஆச்சரியம் நேற்று நான் போஸ்ட் ஒன்று எழுதுவதற்கு லொக் ஆனேன் எனது கணக்கு Approve பண்ணிட்டாங்கள். இப்ப எனக்கும்  Genuine அட்சென்ஸ் கணக்கு இருகின்றது.


நான் செய்தவற்றை எல்லாம் வரிசைகிரமாக சொல்லித்தருகிறேன். இவ்வாறு செய்தால கண்டிப்பாக கிடைக்கும்.



தேவையானவை:




  1. புதிய ஈமெயில் முகவரி
  2. அந்த ஈமெயில் கணக்கில் உருவாக்கிய Blogger கணக்கு.
  3. இங்க்லிஷ் போஸ்ட்களை copy – paste  பண்னும் திறமை
  4. அதிக Followers உள்ள T witter Account
  5. Fans   அதிகமுள்ள ஃபேஸ்புக் கணக்ககு
  6. ஒவ்வொரு நாளும் 10 நிமிடம் செலவழிக்கும் பொறுமை. 



ப்லொக் ஒன்றில் போஸ்ட் எழுதும் முறை.



நான் போஸ்ட் எழுதினேன் தொலைத்தொடர்பு, செல்பேசி மற்றும் தொழின்நுட்ப செய்திகள். (நான் எழுதினேன் என்று சொன்னால் செய்ததெல்லாம்  copy paste  தான்) எனக்கு தேவையான தகவல்களை கூகுல் சேர்ச் பண்ணி தேடிக்கொள்வேன்

(Key Words : Tech News, Android News, iPhone News Gadget News)
 
ஆனால் ஒன்று இவ்வாறு கொப்பி பேஸ்ட் செய்யும் போது கண்டிப்பாக எடுத்த இடத்தை காட்ட வேண்டும். நம்மளில் சில பேர் வீரன் மாதிரி அவரே எழுதின மாதிரி காட்டிக்கொள்வார்கள். இந்த வேலையில் அது முடியாது.

அதாவது,

  1. முதலில் இங்லிஷ் போஸ்ட் ஒன்றை கண்டுபிடித்து தேவையான எழுத்து க்களை  மட்டும் செலெக்ட் பண்ணி பின்பு கொப்பி செய்யவும்
  2. பிறகு  Text File ஒன்றை திறந்து அதில் பேஸ்ட் செய்யவும்.
  3. பின்பு Text File லில் உள்ளதை ப்லொகிற்கு பேஸ்ட் செய்யவும (அதாவது இந்த முறையில் செய்தால் அசல் போஸ்டில் உள்ள  Text Styles, Links  போன்றவை நமது ப்லொக்கில் வருவதை தடுப்பதற்காகும்.) 
  4. கடைசியில்,  Source :  என்று ஒரிஜினல் போஸ்டில் உள்ள லின்க் காட்டவேண்டும் அதாவது அந்த எழுத்தை கிளிக் செய்த உடனே ஒரிஜினல் வெப்சைட்டிற்கு செல்வது போல்.


உதாரணமாக:


Post Header
Past Body
Source : Tech Crunch



நான் சொன்னது எல்லாம் நன்றாக விளங்கியிருக்கும் என்று நினைகின்றேன். விளக்கமாக படத்தில் கீழே பாருங்கள்.




இது போல ஒரு நாளைக்கு இரண்டு போஸ்ட் படி போடவேண்டும். இது லேசான வேலைதான் ஒரு பத்து நிமிடம் பிடிக்கும் இந்த வேலையை செய்து முடிக்க. உங்களால முடிந்தால் ஒரு டொமயின் ஒன்று போடுங்கள். Info வாக இருந்தாலும் பரவாயில்லை 1and1 இலெ $0.99 கெல்லாம் எடுக்கமுடியும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை முறையாக செய்வதென்றால்.



ப்லொக்கிற்கு ட்ரஃபிக் கொண்டுவருதல்.


நாங்கள் முதலில் பயன்படுத்த போவது முகப்புத்தகமும் டுவிட்டரயும். நாங்கள் ப்லொக்கில் போஸ்ட்களை எழுதிய பின்பு சமூக வலைதளங்கள் மூலம் நாம் ட்ரபிக் கொண்டு வர முடியும் அதை எவ்வாறு செய்வது என்று வரிசைகிரகமாக படங்களின் மூலம் விளக்கிகாட்டுகிறேன்.

ப்லொக்கில் உள்ள ஆர்எஸ்எஸ் (கோப்பு வடிவம்) மூலம் ஃபேஸ்புக் ற்கு சேர்ப்பது.
நான் முதலில் சொன்னது நினைவிருக்கும் ஒரு ஃபேஸ்புக் கனக்கு வேண்டும் என்று. அந்த ஃபேஸ்புக் கணக்கில் லொக் ஆகி பிறகு இந்த லின்கிற்கு செல்லவும்

https://apps.facebook.com/rssgraffiti/


 முறை இல 01.




முறை இல 02


முறை இல 03
ப்லொக்கில் உள்ள ஆர்எஸ்எஸ் (கோப்பு வடிவம்) மூலம் ஃபேஸ்புக் ற்கு சேர்ப்பது.
இந்த பகுதியில் தான் நாங்கள் எமக்கு தேவையான விடயங்களை குறிப்பிட வேண்டும்.



வரிசைகிரகமாக பட விளக்கம் தர போனால் இந்த ப்லொக் நிறைய படங்கள் குவிந்து விடும்.. எனவே உதாரணத்திற்காக சில படங்கள் மட்டும் மேலே காட்டியுள்ளேன்.
நான் நினைக்கின்றேன் நீங்கள் முறை இல 01 ஐ செய்யும் போதே தேர்ச்சி பெற்று விடிவீர்கள்.

ஆர்எஸ்எஸ் கோப்புக்களை டுவிட்டரில் பப்லிஸ் செய்யும் முறை.

இது சம்பந்தமாக நாங்கள் பாவிக்க போவது இந்த இரண்டு வெப்சைடுகளை மட்டும் தான் அவை கீழ்வருமாறு..

http://twitterfeed.com
http://dlvr.it

நான் http://dlvr.it  நான் இதைபற்றி சொல்லித்தருகின்றேன் ஏனென்றால் இது தான் இலகுவாக இருக்கும் இதிலே முகப்புத்தகத்திலும் பப்லிஸ் செய்யலாம் இது தொடர்பான சில படங்கள் கீழே பாருங்கள்.

இதுதான் சைட்டின் முகப்பு இதிலே லொக் இன் ஆகி உங்களுடைய பப்லிஸ் வேலையை சுலபமாக முடித்து விடலாம்.




லொக் இன் ஆகிய பின்பு உங்களுடைய ஆர்எஸ்எஸ் கோப்பினை இட்டு பின்பு டுவிட்டர் அல்லது முகபுத்தகம் இதில் இரண்டை அழுத்த மட்டும் தான் நமது வேலை மற்ற தெல்லாம் அது பார்த்து கொள்ளும்.





இவ்வளவுதான் இதே முறையில் நீங்கள்  Visitors  களை கூட்டிகொள்ளலாம். மொத்தம் 200 வந்தவுடன் நீங்கள் அட்சென்சிற்கு அப்ளை பண்ணவும்.


நான் அட்சென்ஸ் பெற்றுகொண்ட ப்லொக்:itechee.com

நான் இந்த அட்சென்ஸ் பற்றி எழுதியதால் மிக ஆழமாக அடிமட்டம் வரைக்கும் இறங்கி அலச வேண்டிய தேவை இல்லை என்று நினைகின்றேன் அதுமட்டுமல்லாமல் அந்தளவிற்கு எனக்கு சொல்ல தெரியாது காரணம் நாங்கள் கற்றது கையளவு கல்லாதது உலகளவு

நான் எதிர்பார்ததெல்லாம் அட்சென்ஸ் பற்றிய அறிமுகம் உங்களுக்கு விளங்கிவிட்டால் கீழே உள்ள மற்ற விடயங்களை விளங்கிகொள்ள இலகுவாக இருக்கும்.


1. Ad units & Placing
2. Keyword Research (Highly Paying Keywords)
3. Backlinks Making (Comment/Post  Backlinks)
4. Introducing SenukeX


பொறுமையாக படித்ததிற்கு நன்றி.
வெற்றியடைய வாழ்த்துக்கள்.


   
My Great Web page
 

இராமேஸ்வரன்

படைப்புக்கள்

Sample text